Saturday, September 24, 2016

யாழ் பல்கலைக்கழகத்தில் நடக்கும் வரம்பு மீறிய பகிடி வதைகள் (வீடியோ இணைப்பு )

இன்னமும் தீர்வின்றித் தொட ரும் ஆபத்து மிகுந்த பிரச்சினையாக இருக்கிறது பகிடி வதை. இலங்கையில் இதுவரை மூன்று பல்கலைக்கழக மாணவர்கள் இந்த பகிடிவதையினால் உயிரிழந்த போதிலும் இன்னமும் இதற்கு நிரந்தரத் தீர்வுகள் கிடைக்கவில்லை.
எனவே அச்சுறுத்தலான பகிடிவதையை நிறுத்துவதற்கான வழிவகைகள் இல்லையா?பகிடி​வதை என்பது இன்று இந்நாட்டில் வேரூன்றியுள்ள வார்த்தையாகியிருக்கின்றது.
இந்த பகிடிவதை தொடர்பில் செய்யப்படும் முறைப்பாடுகள் மற்றும் பகிடி வதையினால் ஏற்படும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.


“அடிச்சு வளர்க்காத பிள்ளையும், ஒடிச்சு வளர்க்காத முருங்கையும் உருப்படாது” எனும் பழமொழிக்கேற்ப பெற்றோர்கள் செயல் பட வேண்டும். விரிவுரையாளர்களையும் ஒழுங்கீனமான மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டும். ஒரு புதுமுக மாணவனுக்குக் கொடுக்கப்படும் அழுத்தங்கள் மென்மையானதாகவோ (mild torture), வேதனையளிக்கத் தக்க வகையிலோ (harsh), உளவியல் (psychologically) அல்லது உடலியல் (physically) என எவ்வடிவத்தில் இருந்தாலும், அவை அனைத்துமே பகிடி வதையென்றே கருத்தில் கொள்ள வேண்டும்.


யாழ் பல்கலைக்கழகத்தில் நடக்கும் வரம்பு மீறிய பகிடி வதைகள் 

யாழ் பல்கலைக்கழகத்திலும் இந்த நிலை கட்டுக்கடங்காத நிலையில் காணப்படுகிறது . இதன் மூலம் பல்கலைக்கழகத்திட்குள் நுழையும் முதலாம் வருகை மாணவர்களே மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் . 
  • மாணவர்கள் இருட்டு அறையில் பூட்டி  வைக்கப்பட்டு தாக்கப்படும் சம்பவங்கள் நடைபெறுவதும் யாழ் பல்கலைக்கழகங்களில் தான் .

  • சில மாணவர்கள் ஆடையை களையும் படி வற்புறுத்தப்படுகிறார்கள் . மீறுவோருக்கு அடி உதை தான்“நீ ஆம்பளையாடா, என்னையெல்லாம் கழட்டச் சொன்னதும் கழட்டிக் காட்டினன்; இங்க ஆம்பளைகள்(?) தானே நிற்கிறோம். டக்கெண்டு கழட்டுடா நாயே” என உளவியல் ரீதியாகவும் தாக்குகிறார்கள். இவ்வாறு புதுமுக மாணவர்கள் எதிர்நோக்கும், உளவியல் மற்றும் உடலியல் தாக்குதல்கள் எண்ணிலடங்கா.. இந்த தண்டனை ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களும்  பெண்களால் துன்புறுத்தப்படுகிறார்கள் . கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த யாழ்ப்பாணத்தில் இப்படியான விடயங்கள் இடம்பெறுவது மிகவும் வேதனைக்குரியது .


தாம் பெறாக் கல்வியை தம் பிள்ளைகளாவது பெற்று விட வேண்டும் எனும் ஒரே நோக்கத்தில் தான் ஒவ்வொரு பெற்றோரும் தம் பிள்ளைகளை கல்வி நிலையத்திற்கு அனுப்புகிறார்கள். கல்வி நிலையத்தை ஒரு பாதுகாப்பான இடமாகவே பெற்றோர்கள் உணர்கிறார்கள். பேராசிரியர்கள் மேலுள்ள நல்லெண்ணமே மாணவனையும் வழிநடத்துகிறது. எனவே கல்வி நிலைய நிர்வாகமே, பகிடிவதைக்கு எதிரான அனைத்துச் சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். பிரச்சினைகள் நடந்த பின் காவல் துறையை நாடுவதை விட, மாணவர்களின் தேவையறிந்து சட்டத்தைப் பாரபட்சமில்லாமல் நடைமுறைப்படுத்துவதே நல்ல முகாமைத்துவமாகும்

பகிடிவதையினை முன்னெடுத்துச் செல்வதற்கான நோக்கங்கள் ஒவ்வொரு காலப் பகுதியிலும் ஒவ்வொரு மாணவ பரம்பரையினருக்கும் ஏற்படுவதால் இந்நிலையினை அற்பமாக எண்ணிவிடாது இதற்காக நீண்ட காலத் தீர்வு ஒன்றுக்குச் செல்வதற்கான காலம் தற்போது வந்திருக்கின்றது என்பதைக் கூற வேண்டும். 

-தமிழ் பொடியன் 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...