Wednesday, October 19, 2016

உள்ளாடை போடக்கூடாது என்று மிரட்டிய பல்கலை மாணவன் இடைநிறுத்தம்

யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தில் முதலாம் வருட மாணவர்கள் கேவலமான முறையில் ராக்கிங் செய்யப்படும் சம்பவங்கள் பரவலாக நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே.  ஆனல்  இது தொடர்பாக பல்கலைக்கழக சமூகம்
நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்ற கருத்து நீண்ட காலமாக இருந்து வருகின்றது .

இந்தவருடம் பல்கலைக்கழகத்திட்கு முதலாம் ஆண்டில் கல்வி கற்க வந்த மாணவன் ஒருவனே 3ம் வருட மாணவனால்உள்ளாடை போடாமல் பல்கலைக்கழகம் வரும்  படி மிரட்டிடப்பட்டுள்ளான் . அந்த மாணவன் மறுக்கவே அவன்  மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது .

இந்த சம்பவம் தொடர்பான முறைப்பாட்டினை தொடர்ந்தே குறித்த 3ம் வருட மாணவன் பல்கலைக்கழகத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளான் . இதற்கு முன்னர் இப்படி பல சம்பவங்கள் இடம்பெற்ற போதும் , பயம் காரணமாக யாரும் மேலிடத்திற்கு முறைப்பாடு செய்யவில்லை என்று அறியமுடிகின்றது .

இடைநிறுத்தம் செய்யப்படட மாணவனின் நண்பர்கள் சிலர் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெருவிக்கின்றன 

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...