Thursday, January 19, 2017

ஜல்லிக் கட்டுக்கு பின்னால் புதைந்திருக்கும் அதி பயங்கர ரகசியம் இதுதான்

ஜல்லிக் கட்டை நடத்தக் கூடாது என்று, அவ்வப்போது சில அமைப்புகள் இந்தியாவில் போராடி வந்தது என்னமோ உண்மை தான் . மிருகங்களை வதைக்கவேண்டாம் என்பது தான் அவர்கள் கருத்தாக இருந்தது.
ஆனால் தற்போது பீட்டா என்னும் கம்பெனி ஜல்லிக் கட்டுக்கு தடை கொண்டு வந்தது வேறு ஒரு பரம ரகசியம் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது . அதாவது தமிழக மக்கள் மொத்தப் பேருக்கும் பாலை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யவேண்டும் . அல்லது வேற்று மாநிலத்தில் இருந்து தான் வரவேண்டும் என்ற நிர்பந்தம் வந்தால் என்ன நடக்கும் ? பாலை உற்பத்தி செய்யும் வேற்றின மக்கள் எத்தனை ஆயிரம் கோடிகளை லாபமாக சம்பாதிப்பார்கள் ? இது தான் பீட்டா என்னும் நிறுவனம் போட்டுள்ள கணக்கு ஆகும்.

அதாவது தமிழ் நாட்டில் பல இடங்களில் கறவைமாடு (பெண்) பல லட்சக் கணக்கில் உண்டு. ஆனால் அவற்றை கர்பமாக்கும் காளை மாடுகள் சுமார் 20 கறவைமாட்டிற்கு 1 என்ற விகிதத்தில் தான் உள்ளது என்கிறார்கள். அதிலும் ஜல்லிக்கட்டிற்காக பல இளைஞர்கள் காளை மாட்டை ஆசை ஆசையாக வளர்க்கிறார்கள் . இதனை தடைசெய்தால். ஒரு கால கட்டத்தில் காளை மாடு வளர்க்கப்படும் விகிதம் வெகுவாக குறையும் . இதனால் அடுத்த சில ஆண்டுகளிலேயே பால் உற்பத்தியும் அப்படியே குறைந்து தமிழ் நாடு வேறு மாநிலத்தில் பாலுக்கா பிச்சை எடுக்க நேரிடும் . அதில் குறித்த மாநிலங்கள். மற்றும் பாலை பதப்படுத்தி விற்க்கும் கம்பெனிகள் பல கோடிகளை சம்பாதிக்கும்.

இதனை அடிப்படை காரணியாகக் கொண்டே பீட்டா என்னும் பெரும் நிறுவனம் வழக்கு மேல் வழக்கு போட்டு . இறுதியாக கோடிக் கணக்கில் செலவு செய்து டெல்லி சுப்பீம் கோர்ட் வரை சென்று தடை உத்தரவு வாங்கியுள்ளது என்று விளக்கம் தருகிறார்கள் சில புத்தி ஜீவிகள் . ஆனால் தமிழனது வீர விளையாட்டை டெல்லி அரசு கொச்சைப்படுத்துவதாக தமிழர்கள் கருதுகிறார்கள் . இருப்பினும் தமிழனை கொச்சைப்படுத்துவது மட்டுமல்லாது, பாலுக்காக அடிமைகளாக்கவும் சில வல்லரசுகள் முனைப்பு காட்டி வருகிறது. இதனை தகுந்த நேரத்தில் அறிந்து, இளைஞர்கள் களம் குதித்திருப்பதும். உலக நாடுகள் பலவற்றில் இதற்கு ஆதரவு பெருகியுள்ளதும் மிகவும் வரவேற்க்க தக்க விடையம் ஆகும் .

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...